Student Details
Parent Details
Guardian Details
Other Details
பள்ளி விதிமுறைகளுக்குட்பட்டு பள்ளியின் நற்பெருமை, கீர்த்தி ஆகியவை பெருகிட நான் செயலாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். குறிப்பாக பள்ளிக்கு ஒழுங்காக வருவேன் என்றும், பள்ளிக்கு வராத நாட்களுக்கு மெய்க்காரணங்களைக் கொண்டு விடுப்பு விண்ணப்பம் அனுப்புவேன் என்றும், 90 விழுக்காட்டிற்கு குறையாவண்ணம் வருகை பதிவு செய்வேனென்றும், பள்ளியில் நடத்தப்பெறும் தனி வகுப்புகளுக்கு தவறாது வருவேனென்றும், படிப்பிற்கு புறம்பான செயல்களில் தலைமையாசிரியரது எழுத்து வடிவ ஆணையின்றி ஈடுபடேனென்றும், பள்ளிக்கு எந்நாளிலும் குறிப்பிட்ட சீருடையில் வருவேனென்றும், கருத்தோடு கற்றுப் பள்ளிச் செயல்கள் அனைத்திலும் முழுமையாக ஈடுபடுவேனென்றும், பள்ளியில் நானும் என்னால் பள்ளியும் பெருமையுடன் வண்ணம் செயலாற்றுவேனென்றும் உறுதிகூறுகிறேன். மாணவர் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், தாய் பெயர் போன்ற விவரங்கள் இந்த விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில்தான் பொதுத்தேர்வுக்கான பெயர்பட்டியலில் இடம் பெறுகிறது என்பதை நான் அறிவேன். பிற்காலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதற்கான உரிய ஆவணங்கள் உரிய நேரத்தில் பள்ளி அலுவலகத்தில் சமர்ப்பிக்கிறேன். அவ்வாறு அன்றி வேறு மாற்றங்கள் ஏதும் கோரமாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன்.